பயாகல கடலில் சீன பிரஜை ஒருவர் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சீன நாட்டை சேர்ந்த சாங் எக்ஸ்யலோங் (வயது – 54) என்ற சீன நபரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சீன பிரஜை, பயாகல வடக்கு பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டிருந்த போதே அலையில் சிக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காணாமற் போன நபரை பிரதேசவாசிகள் கடற்கரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தேடி வருகின்ற போதிலும், நேற்று (21.12) பிற்பகல் வரை அவர் கண்டுபிடிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.