இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் மசாலாப் பொருள்களுக்கு உலக சந்தையில் அதிக கேள்வி நிலவுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2024 ஆம் ஆண்டு 888.74 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருள்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இலங்கையிலிருந்து மிளகு, கறுவா போன்றவைகள் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.இந்த பயிர்கள் மக்களிடமும் அதிக வரவேற்பைப் பெற்றுள்ளன.
எனினும், உள்நாட்டில், உரிய விலைக்கு இவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றன.