சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் 2024 ஓகஸ்ட் மாதத்திற்கான இலங்கையின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் மற்றும் மாதாந்திர நுகர்வோர் பணவீக்கத்தை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய ஓகஸ்ட் 2024 இல் 0.5 வீதமாக இருந்த பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5 வீதமாகக் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஓகஸ்ட் 2024 இல் 0.8 வீதமாக பதிவான உணவு வகை பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.3 வீதமாகக் குறைவடைந்துள்ளது.
மேலும், 2024 ஓகஸ்ட் 0.4 வீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் செப்டெம்பர் 2024 இல் -0.5 வீதமாகக் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.