லெபனானில் கட்டட இடிபாடுகளில் உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா (வயது – 65) என்பவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 17 ஆம் திகதி, பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், லெபனானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய பல நபர்களில் ஒரு இலங்கைப் பெண்ணும் இருப்பதாக உறுதிப்படுத்தியது.