சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர் ஆணையர் டாக்டர் டி வெங்கடேஷ்வரன் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
சந்திப்பின் போது, டாக்டர் டி வெங்கடேஷ்வரன் ரஜினிகாந்தை இலங்கைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது வருகை சுற்றுலா துறையை மேம்படுத்தும் எனவும், மேலும் இலங்கையில் உள்ள சுற்றுலாத்தளங்களை பார்வையிடுவது புதுமையான அனுபவத்தை தரும் எனவும் டாக்டர் டி வெங்கடேஷ்வரன் நடிகர் ரஜினிகாந்திற்கு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளார்.