மியன்மாரில் இருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவர் உள்ளிட்ட இரண்டு கடத்தல்காரர்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
56 கிலோகிராம் எடையுள்ள குறித்த போதைப்பொருள், மியன்மாரில் இருந்து கடல் வழியாக இந்தியாவின் மணிப்பூருக்குக் கடத்தி வரப்பட்டு அங்கிருந்து தமிழ்நாடு – சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு சென்னையின் ஊடாகக் கடல் கரைக் கிராமத்தின் ஊடாக இலங்கைக்குக் கடத்த திட்டமிடப்பட்டிருந்தபோதே இவை கைப்பற்றப்பட்டுள்ளது.