-மன்னார் நிருபர்-
ராமநாதபுரம் அருகே புதுமடம் கடற்கரை பகுதியில் இருந்து நேற்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு கடத்தல் பொருள் கடத்த உள்ளதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து மரைன் பொலிஸார் புதுமடம் கடற்கரை பகுதிக்கு விரைந்து சென்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கு இடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டாட்டா ஏசி வாகனத்தை சோதனையிட்ட போது அதில் சோப்பு, எண்ணெய், வாசனை திரவியம் உள்ளிட்ட இந்திய பெறுமதியில் 16 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை கடல் வழியாக இலங்கைக்கு கடத்த ஆயத்தமாக வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
