இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்கவை நேரில் சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் ஞாயிற்றுக்கிழமை இருவருக்கும் இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை இலங்கையின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திசாநாயக்கவுக்கு பல சர்வதேச நாடுகள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றன.