இலங்கைக்கான அவசர கடனுதவி தொடர்பில் IMF ஆரம்ப கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளது

இலங்கைக்கான அவசர கடனுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியம் ஆரம்பக்கட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாகவும், அதற்கான அறிவிப்பு நாளை வியாழக்கிழமை வெளியிடப்பட உள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் 3 பில்லியன் டொலர்களை கோருவதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று புதன்கிழமைபாராளுமன்றத்தில் தெரிவித்தார்.