கொழும்பு – கிருலப்பனை மாவத்தையில் அமைந்துள்ள இறப்பர் பால் சேகரிப்பு நிறுவனத்தின் பிரதான காரியாலத்திற்கு முன்பாக நேற்று செவ்வாய் கிழமை இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிருலப்பனை மாவத்தை பகுதிக்கு நேற்றிரவு உந்துருளியில் பிரவேசித்த இருவர்இ குறித்த அலுவலகத்தின் நுழைவாயில் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த துப்பாக்கிச் சூடு தொடர்பிலே இன்று பொலிஸாரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.