அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் தற்போதைய நிலை தொடர்பில் கள விஜயம் செய்து ஆராய்ந்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் நேற்று வியாழக்கிழமை இறக்காமம் பிரதேசத்திற்கு விஜயம் செய்து குடுவில், மாணிக்கமடு, அமீரலிபுர பொதுமக்களையும், இடைத்தங்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன்போது பாதிப்பு நிலைகளை மக்களிடம் கேட்டறிந்த பாராளுமன்ற உறுப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் ஏற்பாடுகள் தொடர்பிலும் ஆராய்ந்து வருவதுடன் இறக்காமம் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.ஏ. நசீல் அவர்களிடம் துரிதகதியில் நிவாரண பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் கலந்துரையாடியதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் நிவாரண பணிக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.
இந்த விஜயத்தில் இறக்காமம் பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம். முஸ்னி, பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகர்கள், இறக்காமம் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


