கிரிந்தி ஓயாவில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக இரண்டு யானைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளன.
குறித்த யானைகளில் ஒன்று ஆறடி உயரமும் 30 வயதுடையது எனவும் மற்றைய யானை ஆறடி உயரமும் சுமார் 25 வயதுடையது எனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர் .
குடாஓயா, துலுல்ல பிரதேசத்தில் உள்ள கிராம மக்களினால் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த இரு யானைகளும் நேற்று வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான மேலதிக விசாரைணகளை வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
