மாத்தறையில் இரண்டு பெண்களை தாக்கி கொலை செய்து தங்க ஆபரணங்களை திருடிச்சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலடுவ, மாலிம்பட, அகலவத்தையை சேர்ந்த கொத்வில விதாரணகே நிமலாவதி (வயது – 67) மற்றும் வல்கம மாதோட்டகம பகுதியைச் சேர்ந்த ஹேவா பின்னதுவாகே விமலாவதி (வயது- 70) என்ற இரு பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிரவுன்ஸ் ஹீல் பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றிற்குள் நுழைந்து குளியலறையில் வைத்து பணிப்பெண்கள் இருவரையும் தடியால் அடித்து கழுத்தை நெரித்து கொலைசெய்து, வீட்டில் இருந்த தங்க ஆபரணங்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்களை ஒருவர் திருடி சென்றுள்ளார்.
அதன்படி, விசாரணைகளை ஆரம்பித்த மாத்தறை தலைமையக பொலிஸ் பரிசோதகர் ரொஷான் ஹெட்டியாராச்சி உள்ளிட்ட குழுவினர், அருகில் உள்ள வீடொன்றின் சிசிடிவி கமராக்களை சோதனை செய்து கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்தனர்.