இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல், பிலஸ்ஸ பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், குறித்த பகுதியில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் உயிரிழந்தவர் பிளெஸ்ஸ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அத்துடன், மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.