-மஸ்கெலியா நிருபர்-
இராணுவத்தினரின் பேருந்து ஒன்று பிரேக் இயங்காததால் விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச் சம்பவம், கொழும்பு வீதியில் கலுகல பகுதியில், நேற்று வியாழக்கிழமை இரவு இடம் பெற்றுள்ளது.
நல்லதண்ணி நகரில் இருந்து, கொம்பான்கொட இராணுவ களஞ்சிய முகாமிற்கு சென்று கொண்டிருந்த வேளையில், இராணுவ பேருந்து பிரேக் இயங்காததால், முன்னால் வந்த பார ஊர்தியில் மோதி விபத்துக்குள்ளாகியது.
பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது சேதமடைந்ததுடன், எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கினிக்கத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
விபத்து குறித்து கினிக்கத்தேன பொலிஸார் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.