-யாழ் நிருபர்-
கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இராணுவத்தினரால் இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மணல் அகழ்வு இடம் பெறுவதாக இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய நேற்றையதினம் குறித்த பகுதி சுற்றிவளைக்கப்பட்டு அனுமதிப்பத்திரம் இன்றி மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவியந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன்போது சாரதிகளும் கைது செய்யப்பட்டு தர்மபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்