பெரும்போக நெல் விதைப்பு காலமானது ஆரம்பித்த நிலையில் மழை கிடைக்காமையினால் விதைப்புகள் பின்தள்ளப்படுமா, விளைச்சல் கிடைக்குமா என்ற அச்சத்தில் விவசாயிகள் காணப்பட்டனர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை இரவு யாழ்ப்பாணத்தில் விதைப்பிற்கு ஏற்ற வகையில் மழை வீழ்ச்சி கிடைத்துள்ளதுடன் தமது விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் செயற்பாடுகளில் விவசாயிகள் இன்று ஞாயிற்று கிழமை மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.