வெள்ள நிலைமை காரணமாக மட்டக்களப்பு ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து பொலன்னறுவை ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கொழும்பு கோட்டையிலிருந்து மட்டக்களப்பு வரையில் பயணிக்கும் இரவு அஞ்சல் ரயில் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், மட்டக்களப்பிலிருந்து இரவு 8.15 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்படும் பாடுமீன் புகையிரத சேவையும், கொழும்பிலிருந்து 7மணிக்கு மட்டக்களப்பு நோக்கி புறப்படும் புகையிரத சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, மட்டக்களப்பு புகையிரத நிலைய பிரதம அதிபர் தெரிவித்துள்ளார்.