உயர்தரப் பரீட்சையில் விவசாய விஞ்ஞானப் பிரிவின் இரண்டாம் பகுதிக்கான விசேட பரீட்சை எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 மணி முதல் 11.40 மணி வரை நடத்தப்படுமென இலங்கைப் பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
கடந்த 10ம் திகதி பரீட்சைகள் திணைக்களத்தினால் இரத்து செய்யப்பட்ட விவசாய விஞ்ஞானப் பிரிவின் இரண்டாம் பகுதிக்கு பதிலாகவே இந்த பரீட்சை இடம்பெறவுள்ளது.
மேலும் இம்மாதம் 31ஆம் திகதி முடியவிருந்த 2023(2024) உயர்தரப் பரீட்சை பெப்ரவரி 01ஆம் திகதி நிறைவடையும் எனவும் அன்றைய தினம் அனைத்துப் பரீட்சை நிலையங்களும் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.