மொனராகலை பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 12 மற்றும் 10 வயதுடைய சகோதரிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த மதுரகெட்டிய இறப்பர் ஆராய்ச்சி நிறுவனத்தில் கள அதிகாரியாக கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான 57 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுருகெட்டிய பிரதேசத்தில் உள்ள வீட்டில் சில காலமாக அறையில் தங்கி வேலை செய்து வந்த நிலையில் இரண்டு சிறுமிகளின் தாயும் தந்தையும் கூலித்தொழிலாளர்களாக உள்ள நிலையில், அவர்கள் வீட்டில் இருந்து வெளியில் சென்ற போது சந்தேகநபரால் இரண்டு சிறுமிகளும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுமிகள் இருவரும் மருத்துவ பரிசோதனைக்காக மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மொனராகலை தலைமையக பொலிஸ் பரிசோதகர் பி.எஸ்.சர்மிந்த சஞ்சீவ மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.