நுரைச்சோலை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை மீட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதன் போது இரண்டு கோடி ரூபா பெறுமதியான 63 பொதிகளில் 1955 கிலோ பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு கடற்படை கட்டளை பிரிவினர் நுரைச்சோலை பகுதியில் நடாத்திய விசேட தேடுதல் நடவடிக்கையில், நுரைச்சோலை பொருளாதார நிலையத்திற்கு அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை சோதனையிட்ட போதே இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் லொறி மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.