அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கொடுப்பனவுகள் இம்மாதம் முதல் உரிய முறையில் வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த திட்டம் தொடர்பில் இதுவரை 982,770 மேன்முறையீடுகளும் 62,368 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஆட்சேபனைகள் மற்றும் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்காத அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் பயனாளிகளுக்கு இம்மாதம் முதல் உரிய கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கூறினார்.
அத்துடன் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.