செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் மதிப்பு இன்று புதன்கிழமை மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்முதல் விகிதம் ரூ.317 ஆகவும், விற்பனை விகிதமும் ரூ. 327.18 ஆகவும் பதிவாகியுள்ளது.
வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களின் பெறுமதிக்கு எதிராக ரூபாயின் மதிப்பும் உயர்ந்துள்ளது.
