இலங்கை மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.
இதற்கமைய, இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 04 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 303 ரூபாய் 81 சதமாக காணப்பட்டது.
அத்துடன், இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 312 ரூபாய் 68 சதமாக பதிவாகியுள்ளது.
நேற்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 313 ரூபாய் 41 சதமாக காணப்பட்டது.