கொழும்பு நகரில் இன்று ஞாயிற்று கிழமை வாகன நெரிசல் அதிகம் காணப்படுவதால் அவற்றை சீர் செய்ய விசேட போக்குவரத்து திட்டம் ஒழுங்கு செய்யப்படடிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இன்று கொழும்பு நகரில் ஏற்படக்கூடிய வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில் மாலை 5 மணி முதல் விசேட போக்குவரத்து திட்டம் காலிமுகத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.