
இன்று முதல் பாடசாலைகள் மற்றும் பொது போக்குவரத்து சேவைகள் வழமைக்கு
அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் இன்று திங்கட்கிழமை முதல் வாரத்தின் 5 நாட்களும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், போக்குவரத்து சிரமம் உள்ள பிரதேசங்களில் உள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பொருத்தமான போக்குவரத்து திட்டத்தை தயாரிக்குமாறு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த மூன்று மாதங்களில், பாடத்தை கற்பித்தலுக்கு பயன்படுத்த வேண்டும், பாடநெறி மற்றும் பாடநெறிக்கு புறம்பான செயல்பாடுகளை பாடசாலை நேரத்திற்கு வெளியே நடத்த வேண்டும் மற்றும் பாடசாலை நாட்களில் திருவிழாக்கள் போன்றவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சு அறிவுறுத்தியது.
இதேவேளை, பொதுச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டு வாரத்தின் ஐந்து நாட்களிலும் பாடசாலைகள் நடத்தப்படவுள்ள நிலையில், பேருந்து சேவையை வழமைக்கு கொண்டுவர தீர்மானிக்கப்பட்டதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.