இன்று முதல் பஸ் கட்டணங்கள் 35 வீதமாக அதிகரிப்பு

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பஸ் கட்டணங்கள் இன்று முதல் அழுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முதல் 35 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்ச பஸ் கட்டணம் 20 ரூபாவிலிருந்து 27 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பஸ் சேவைகள் நேற்று செவ்வாய்க்கிழமை இடைநிறுத்தப்பட்டிருந்தன. நாட்டின் பல்வேறு இடங்களில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக தனியார் பஸ் சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்திருந்தன.

இதேவேளை, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பஸ்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டன. எரிபொருள் விலை அதிகரிப்பு மற்றும் வருடாந்த பஸ் கட்டண திருத்தம் என்பன அடிப்படையில் குறைந்த பஸ் கட்டணம் 40 ரூபாவரை அதிகரிக்க வேண்டுமென இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்திருந்த நிலையிலேயே இவடவாறு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.