மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (15) பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது .
வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய, வடமேல், தெற்கு மாகாணங்கள், திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்றும் வீசக்கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது .
பலத்த காற்று ,மின்னல் தாக்கங்களால் ஏற்படக் கூடிய தாக்கங்களை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது .