இன்று செப்டம்பர் 8 உலக எழுத்தறிவு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ நிறுவனம் இந்த நாளை 1966 ஆம் ஆண்டில் அறிவித்தது, மேலும் முதல் சர்வதேச எழுத்தறிவு தினம் 1967 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
இத் தினத்தின் நோக்கம்
எழுத்தறிவின் முக்கியத்துவத்தை மக்களுக்கு நினைவுபடுத்துவதும், அதன் மூலம் சமூகத்தில் எழுத்தறிவின் பங்கை மேம்படுத்துவதும் இதன் முக்கிய நோக்கம் ஆகும்.
தகவல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உலகில் திறன்களை வளர்ப்பதற்கும், எழுத்தறிவின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் இந்த நாள் உதவுகிறது.
52-வது சர்வதேச எழுத்தறிவு தினத்தின் கருத்துருவானது, ‘எழுத்தறிவு மற்றும் திறன் வளர்ச்சி’ ஆகும்.