இன்று வியாழக்கிழமை ஆரம்பமாக இருந்த கல்முனை கல்வி வலய முஸ்லிம் பாடசாலைகள் நாட்டிலும்இ எமது பிரதேசங்களிலும் ஏற்பட்டுள்ள தொடர்ச்சியான அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளநிலை காரணமாக இன்று வியாழக்கிழமை மற்றும் நாளை வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் பாடசாலைகள் மூடப்பட்டு, மீண்டும் எதிர்வரும் 16.01.2024 அன்று (செவ்வாய்க்கிழமை) வழமைபோன்று பாடசாலைகள் இடம்பெறும், என கல்முனை வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹதுல் நஜீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
இந்த விடுமுறை இரு தினங்களுக்குமான பதில் பாடசாலை 20 ம் திகதி சனிக்கிழமையும், 27ம் திகதி சனிக்கிழமையும் நடைபெறவேண்டும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதிக்கிணங்க கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு அமைவாக கல்முனை வலயக்கல்வி பணிமனை விடுத்துள்ள அறிவிப்பாகும், என மேலும் அவர் தெரிவித்தார்