அரசாங்கம் நடத்திய அவசரக் கூட்டத்தைத் தொடர்ந்து டோக்கியோவில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய ஜப்பானின் தலைமை அமைச்சரவை செயலாளர் யோஷிமாசா ஹயாஷி கூறுகையில், பூகம்பத்தால் ஏற்பட்ட பேரழிவின் “உயிர்களுக்கு முதலிடம் கொடுக்க” மற்றும் “நிலைமையை புரிந்து கொள்ள” பிரதமர் ஃபுமியோ கிஷிடா அரசாங்கத்திற்கு அறிவுறுத்தினார்.
அவர் கூறுகையில் “ஜப்பான் மக்களிடம், தயவு செய்து எச்சரிக்கையாக இருங்கள், ஒரு வாரத்திற்கு ஏழு தீவிரத்தன்மை கொண்ட நிலநடுக்கம் பதிவாகலாம். “அதிர்வு வலுவாக உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு, உள்ளூர் அலுவலகங்கள், தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையம் மூலம் வெளியேறும் தகவலைக் கவனித்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுக்கவும்.”
மேலும் தற்போது வரை மொத்தம் 57,360 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.