நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தனது ஒரே மகன் காய்ச்சல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளதாக மாணவனின் தந்தை எம்.என்.இஸ்திகார் தெரிவித்தார்.
நீர்கொழும்பு பகுதியை சேர்ந்த நீர்கொழும்பு அல்-ஹிலால் தேசிய பாடசாலையில் தரம் 8 இல் கல்வி பயிலும் அப்துல் அஸீஸ் (வயது – 13) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளார்.
சிறுவனின் மரணம் தொடர்பில் தந்தை தெரிவிக்கும் போது இரண்டு நாட்களுக்கு முன்பு, அவனுக்கு தலைவலியுடன் காய்ச்சல் ஏற்பட்டது. அவ்வப்போது காய்ச்சல் குறைந்து கொண்டே வந்தது. பின்னர் நேற்று சனிக்கிழமை இரவு எனது மகன் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்துள்ளார்.
இதன்போது இரவு 10.30 மணியளவில் எமது மகனை நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதித்தோம். அங்கு மகன் தீவிர சிகிச்சை பிரிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.வைத்தியர்கள் பெரும் முயற்சி மேற்கொண்டனர். என் மகன் இரவு உணவைக் கூட எடுத்துக் கொண்டான். ஆனால் மகனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. எனது மகன் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.20 மணியளவில் உயிரிழந்துள்ளார் என தெரிவித்தார்.