அரசாங்கத்தின் பொருளாதார வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த வருட இறுதிக்குள் ரூபாயின் பெறுமதி வலுவடையும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஷில்பா அபிமானி தேசிய கைவினைப்பொருட்கள் ஜனாதிபதி விருது வழங்கும் விழா 2023 எனும் நிகழ்வு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

