யாழில் நேற்று முன்தினம் சனிக்கிழமை தவறான முடிவெடுத்து மாணவன் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் க.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி பயிலும், கலாசாலை வீதி, திருநெல்வேலி பகுதியை சேர்ந்த கஜேந்திரன் சங்கீர்த்தன் (வயது – 16) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,
குறித்த மாணவன் நேற்றுமுன்தினம் கோயிலுக்கு சென்று இரவு 10 மணிக்கு வீட்டுக்கு வந்துள்ளார். இந்நிலையில் மாணவனுக்கும் தந்தைக்கும் இடையில் வாய்த்தர்கம் ஏற்பட்டதையடத்து அவர்கள் நித்திரைக்கு சென்றனர்.
இந் நிலையில் நேற்று ஞாயிற்று கிழமை காலை 6.30 மணியளவில் பெற்றோர், மகனை தேடியவேளை மகன் வீட்டின் பின்புறம் இருந்த மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது சடலம் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயமா பிறேம்குமார் மேற்கொண்டார்.