இந்தோனேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் உள்ள அபேபுராவிற்கு வடகிழக்கே 162 கிலோமீட்டர் தொலைவில் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் -6.5ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுனாமி எச்சரிக்கை விடப்படாவிடினும் அதிர்வுகள் ஏற்படக்கூடும் என இந்தோனேசியாவின் வானிலை, தட்பவெப்ப நிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதேவேளை நேற்றைய தினம் இலங்கையை அண்மித்த பகுதிகளில் பாரிய நிலநடுக்கம் பதிவாகியிருந்த நிலையில் இலங்கையின் கரையோர மக்களை அவதானமாக இருக்கமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.