இந்திய துணை உயர்ஸ்தானிகரான டாக்டர். சத்யஞ்சல் பாண்டே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இதில் சாணக்கியனுடன் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான த.கலையரசன் மற்றும் முன்னாள் மாநகர முதல்வர் தி. சரவணபவன் உட்பட மட்டக்களப்பு தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் கலந்துகொண்டனர்.
இச் சந்திப்பின் போது வட கிழக்கில் குறிப்பாக கிழக்கில் இந்திய அரசினால் மேற்கொள்ளப்பட இருக்கும் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் சமகால அரசில் சம்பந்தமாகவும் தீரா பிரச்சனையாகவுள்ள மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை தொடர்பிலும் கலந்துரையாடல் அமைந்திருந்தது, என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.