இந்தியாவிடமிருந்து மேலும் 21,000 மெட்ரிக் தொன் உரம் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளது.
கடந்த மாதமும் இந்தியாவினால் 44,000 மெட்ரிக் தொன் உரம் வழங்கப்பட்டது.
இலங்கை மக்களுக்கான இந்தியாவின் சிறப்பு உதவியின் கீழான இந்த உரத்தை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்தார்.
அதற்கமைய, இந்த ஆண்டில் இதுவரை இந்தியாவின் ஆதரவில் 4 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உரம் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவிக்கிறது.