இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் எதிர்கொள்ளும் சிக்கலான சவால்களுக்கு கூட்டுத் தீர்வுகளைக் கண்டறிய இலங்கையுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகப் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
காலி உரையாடல் – 2025 இற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட பாகிஸ்தான் கடற்படையின் சிரேஷ்ட பிரதிநிதிகள் குழு இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளது.
பாகிஸ்தான் கடற்படையின் கடலோரப் பிராந்திய தளபதி ரியர் அட்மிரல் பைசல் அமீன் தலைமையிலான குழுவினர் இலங்கை வந்திருந்தனர்.
இந்நிலையில் கொழும்பு மாநாட்டில் பாகிஸ்தான் கடற்படை பங்கேற்பது, இஸ்லாமாபாத் மற்றும் கொழும்பு இடையேயான நீண்டகால பாதுகாப்பு கூட்டாண்மையை மீண்டும் உறுதிப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.