இத்தாலியிலிருந்து, ஹோமாகம பகுதியில் உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்த பொதியிலிருந்து, சுமார் 4 கிலோகிராம் நிறையுடைய, 61 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஹஷீஸ் ரக போதைப்பொருள் கைபற்றப்பட்டுள்ளது.
உணவுப் பொருட்கள் இருப்பதாக தெரிவித்து, குறித்தப் பொதி சீதுவை பகுதியில் உள்ள விமான பொருட்கள் களஞ்சிய முனையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அந்த பொதியை பொறுப்பேற்க வந்த நபர் சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அதன் பேச்சாளரும் சிரேஷ்ட சுங்க பணிப்பாளருமான சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.