அஹுங்கல்ல பகுதியில் காணி தகராறு தொடர்பான உரையாடலின் போது, பெண் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் தனது தந்தையை தாக்கியதாகியுள்ளதாக அவரது தந்தை அஹுங்கல்ல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
பேருவளை பொலிஸில் கடமையாற்றும் சார்ஜன்ட் ஒருவரே தந்தையை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் பிரகாரம், பொலிஸ் சார்ஜன்டான மகளும் முறைப்பாட்டாளரான தந்தையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு முறைப்பாடு கேட்ட போது இருவரும் சமரசம் செய்ய விரும்பவில்லை எனத் தெரிவித்தனர்.