இணையவழி மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜைகள்

இணைய வழியில் முறைகேடுகளில் ஈடுபட்ட சீன பிரஜைகள் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய, காலி காவல்துறையினால் உடுகம பகுதியில் உள்ள தற்காலிக தங்குமிடம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் 24 மற்றும் 36 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களிடம் இருந்து 9 கணினிகள், 73 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பெருந்தொகையான சிம் அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்