இந்தியாவில் பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராம பகுதியில் ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த 4 வயது குழந்தை பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
குல் கிராம பகுதியில் உள்ள தோட்டத்தில் குழந்தை விளையாடிக்கொண்டிருந்த போது, கிணற்றினுள் விளுந்துள்ளது இதனை அவதானித்த, குழந்தையின் தாய் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து 60 அடி ஆழத்தில் இருந்த குழந்தையை 9 மணி நேர போராட்டத்திற்கு பின்னர், மீட்புக்குழுவினர் பாதுகாப்பாக உயிருடன் குழந்தையை மீட்டுள்ளனர்.
மீட்புக்குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.