வவுனியா எல்லப்பர் மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலய உற்சவத்தில் மின்சாரம் தாக்கி இளைஞரொருவர் மரணமடைந்துள்ளார்
நா. கபிலன் (வயது – 29) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மருதங்குளம் பகுதியிலுள்ள ஆலயத்தில் இரவு நேரத்தில் இடம்பெற்ற உற்சவ பூஜையின் போது ஆலயத்தின் கதவினுள் இருந்த மின்சார வயரினை குறித்த இளைஞன் எடுக்க முட்பட்டதில் வயரில் மின்சார ஒழுக்கு காணப்பட்ட இடத்தில் இளைஞரின் கைப்பட்டமையினையடுத்து மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலிலேயே உயிரிழந்துள்ளார்.
இளைஞரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










