கடுவெல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை முதலையின் தாக்குதலுக்கு இலக்காகி 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தின் போது சிறுவன் தனது சகோதரன் மற்றும் பாட்டியுடன் களனி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்தவர் கடுவெல வெலிவிட்ட பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறுவனின் சடலத்தை கண்டுபிடிக்க பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.