மஹியங்கனை பாலத்தின் மேல் இருந்து இளைஞனும் யுவதியும் மகாவலி ஆற்றில் குதித்துள்ளனர். எனினும் ஆற்றில் குதித்த இளைஞன் நீந்தி கரைக்கு வந்ததை அடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளடுடன் யுவதி காணாமல் போயுள்ளார்.
ரிதீமாலியத்த பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுடைய யுவதியே இவ்வாறு காணமல் போயுள்ளார்.
குறித்த பெண் நேற்று காலை மேலதிக வகுப்பில் கலந்து கொள்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இவர்கள் குதித்ததை நேரில் பார்த்த நபர் ஒருவர் கூறும் போது, முதலில் யுவதி ஆற்றில் குதித்ததாகவும் பின்னர் இளைஞன் ஆற்றில் குதித்ததாகவும் தெரிவித்தார்.
பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

