ஹட்டன் – டிக்ஓயா ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்தவரின் சடலம் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டிக்கோயா, ஒஸ்போன் தோட்டத்தின் மேல் பிரிவை சேர்ந்த சந்திரசேகரன் சுரேன் (வயது – 28) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் நகருக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை வந்த இவர், மது அருந்திவிட்டு, பேருந்தில் சென்றுள்ளார், பேருந்தில் இருந்து இறங்கி, வீடு நோக்கி நடந்து செல்லும் போதே ஆற்றில் விழுந்து காணாமல் போய் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து தோட்ட மக்கள், பொலிஸாருடன் இணைந்து நடத்திய தேடுதலின் போது, நேற்றைய தினம் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.