-யாழ் நிருபர்-
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி பகுதியில் நேற்று முன்தினம் புதன் கிழமை ஆறு வயது சிறுமியை தந்தை தாக்கியுள்ளார்.
தந்தை நேற்று முன் தினம் மது போதையில் வீட்டிற்கு வந்து சிறுமியின் தலையில் கைப்பேசியால் தாக்கியுள்ளார். இது குறித்து அயலவர்கள் கிராம சேவகர் மற்றும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்தினர்.
இந்நிலையில் நேற்றையதினம் வியாழக்கிழமை குறித்த வீட்டிற்கு வந்த உத்தியோகத்தர்கள் தாயாரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். தந்தையார் வேலைக்கு சென்றதன் காரணமாக எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தாய், தந்தை இருவரையும் சங்கானை பிரதேச செயலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
குறித்த நபர் தினமும் குடித்துவிட்டு வந்து பிள்ளைகள் மீது தாக்குதல் நடாத்துவதாகவும், தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வதாகவும் அயலவர்கள் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. மேலும் பிள்ளைகளுக்கு செய்யும் கொடுமைகள் குறித்து தாயார் இதுவரை எந்தவிதமான முறைப்பாடுகளும் செய்யவில்லை என தெரிவிக்கப்படுகிறது.