களுத்துறை நாகொட பகுதியில் இத்தாலியிலிருந்து வந்த மகன் தந்தையின் எலும்புக்கூட்டை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
களுத்துறை நாகொட பகுதியில் 70 வயதான தந்தை தனியாக வசித்து வந்த நிலையில் இந்த வீட்டில் சில காலம் முன்பு வசித்து வந்த தாயும் இறந்துள்ளார்.
இந்நிலையில் இத்தாலியில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்த அவரது மகன், இலங்கையில் தந்தையிடம் நலம் விசாரித்து வந்துள்ளார்.
இதேவேளை கடந்த 6 மாதங்களாக தந்தைக்கு தொலைபேசி அழைப்பு எடுத்தும் பதில் இல்லாது இருந்து வந்துள்ளது. இதனால் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்த போது, வீடு சேதமடைந்து விட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து கடந்த 19ஆம் திகதி மகன் இலங்கைக்கு வந்து தந்தைக்கு என்ன நடந்தது என அறிய வீட்டிற்கு சென்றுள்ளார். வீடு பாழடைந்து கிடந்ததால், மகன் கதவை உடைத்து சோதனையிட்டபோது, எலும்பு கூடாக உருகிய நிலையில் தந்தை சடலமாக கிடந்தார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, முதற்கட்ட விசாரணைகளின் பின்னர், எலும்புக் கூடாக மாறிய சடலம் நாகொட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதேவேளை இறந்தவர் அவரது தந்தையா என்பதை உறுதிப்படுத்த டிஎன்ஏ சோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.