நேபாளத்தின் தலைநகர் பகுதியில் காத்மண்டுவில் இருந்து சொலுகும்பு நோக்கி பறந்து கொண்டிருந்த ஹெலிகொப்டர் அந்நாட்டின் நேரப்படி இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்த நிலையில் ஆறு பேருடன் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டரில் பயணித்தவர்களில் 05 பேர் வெளிநாட்டவர்கள் எனவும் மற்றைய நபர் விமானி எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் காணாமல் போன ஹெலிகொப்டரை தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.