ஆயுர்வேத பாதுகாப்பு சபை வைத்தியர்களின் எதிர்கால திட்டங்கள் பற்றிய கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்-

ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் வைத்தியர்களுக்கிடையேயான கலந்துரையாடல் சுதேச வைத்திய அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது.

இதன் போது ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் வைத்தியர்களின் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பாத்தீபன், ஆயர்வேத சமூகநல உத்தியோகத்தர், ஆயுர்வேத பாதுகாப்பு சபையின் வைத்தியர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.